தினமும் வாழை இலையில் உணவு சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாகும். மந்தம், இளைப்பு போன்றவை நீங்குவதுடன் பித்தம் தணியும்.
வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் குடல் புண், ரத்தபேதி, மூலநோய், பெண்களுக்கு மாத விடாய் வயிற்றுவலி ஆகியவை குணமாகும்.
வாழை தண்டுசாறுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே இதை நீர் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும் தேவையற்ற உடல் பருமனைகுறைக்கும் இதை உலர்த்திபொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாவதுடன்கல்லீரல் வலுப்பெறும்.
வாழை பிஞ்சு, காயினால் ரத்த மூலம், ரத்தக்கடுப்பு, வயிற்றுப்புண் நீரழிவு நோய்நீங்குவதுடன் உமிழ்நீர் அதிகம் சுரத்தல், உடல்வெப்பம், இருமல் தணியும்.
அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண் வராது. உடல் தோல் பளபளப்பாகும். பெண்களுக்கு மாத விலக்கு சீராகும். அறிவு விருத்தியாகும். இத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும். வாழை பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும்.
நன்றி
தினகரன்

Post a Comment