இயற்கையா விளையுறத சாப்பிட்டு வந்தால் நோய் நொடியில்லாம வாழறதுக்கான வழி மட்டுமில்லல் வந்த நோய்களை விரட்டி அடிக்கறதுக்கான வழியும் கிடைக்கும்.
உதாரணத்துக்கு எத்தனையோ விஷயங்கள பட்டியல் போட முடியும். இந்தக் கோதுமை இருக்கே கோதுமைல் அதுல உள்ள சக்தி, நிறைய நோய்களுக்கு தீர்வா இருக்குங்கறது தெரியுமோ?
கோதுமையை நல்லா கழுவி முளைகட்ட வைக்கணும். முதல் நாள் சாயங்காலம் முளைகட்டி, மறுநாள் காலையில எடுத்து அதோட கொஞ்சம் தண்ணிவிட்டு நல்லா அரைச்சி பால் எடுக்கணும். அதுல கொஞ்சம் தேங்காய்ப்பால், சுவைக்கு தேன் சேர்த்துச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்ல பலம் கிடைக்கும்.
இது, வாத நோயை குணமாக்கும். வெள்ளை அணுக்களோட எண்ணிக்கையை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, மூக்குல நீர் வடியறது உள்ளிட்ட சின்னச் சின்ன தொந்தரவுகளையும் அண்ட விடாது. இன்னும் சொல்லப்போனா, புற்றுநோயைக் எதிர்க்கக்கூடிய சக்திகூட இருக்கு இந்த கோதுமைப்பாலுக்கு.
நன்றி
தினகரன்

Post a Comment