0


ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி. ஆரோக்கியமான பற்களே நம் உடலுக்கு நல்லது. வாய் நமது உடலின் கண்ணாடி ஆகும். ஏனெனில் உடலில் ஏற்படும் அனேக நோய்களுக்கு சிம்டம்ஸ் வாயில் காணப்படும். மேலும் வாயிலும் பற்களிலும் ஏற்படும் நோய்களால் உடலில் பல பாகங்களுக்கும் கெடுதல் ஏற்படும்.



உதாரணத்திற்கு சொத்தையாகி கெட்டு செமித்து போன பற்களை எடுக்காமல் வைத்திருப்பவர்களுக்கு தோல் நோய்கள், மூட்டு, இடுப்பு வலி மற்றும் மூட்டுகளில் வீக்கம், கண்களில் புரை ஏற்படுதல் (சைனஸ் ட்ரபிள்) தொண்டையில் சதை வளர்தல், இளநீர்கட்டு இருதய நோய்கள் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே பற்களில் ஏற்படும் சொத்தையை வலி இல்லாத காரணத்தால் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பற்களில் ஏற்படும் சொத்தை சிறுவர்களுக்கு பால் பற்களில் வலி உண்டாக்குவதற்கு ஒரு வருடம் ஆகலாம். அதுவே பெரியவர்களுக்கு 2 வருடங்கள் ஆகலாம். எனவே பல்லில் சொத்தை ஏற்பட்டால் வலி வரும் முன்னர் பல் மருத்துவரை சந்தித்து சுத்தப் படுத்தி அடைத்துக் கொள்ளலாம். பற்களின் பின் பக்கங்களிலோ, இரு பற்களுக்கு நடுவிலோ நோயாளிகளுக்கு நேரடி யாகவோ கண்ணாடி மூலமாகவோ பார்க்க இயலாத இடங்களில் சொத்தை வர வாய்ப்பு உள்ளவர்கள் 6 மாதங் களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து பற்கல் சொத்தை ஏற்படு கிறதா என சோதித்து கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு சில பற்களுக்கு வேர் சிகிச்சை செய்தும் சரி செய்து கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் பொதுவாக ஆண்டிற்கு ஒருமுறை பல் செக்கப் செய்து கொண்டால் பல் மருத்துவரின் ஆலோ சனைப்படி பற்களில் சொத்தை வரா மலும், பற்களை மற்றும் காரை ஏற்படாமலும் சொத்தை வந்த பற்களை அடைத்தும் பல் ஈறு நோய்கள் வராமலும் தடுத்துக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு பிறந்த 6 மாதங்களில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் பொழுதிலிருந்தே பற்களை சுத்தம் செய்து விடுதல் வேண்டும். குழந்தைகளுக்கு 6 வயது வரும் வரையிலாவது பெற்றோர்கள் உதவி பல் துலக்குவதில் இருந்தல் அவசியம். இதுவே பிற்காலத்தில் சப்முகாஸ் மற்றும் ஓரல் கேன்சர் (வாய் புற்றுநோய்) ஏற்படுவதற்கும் உகந்ததாகி விடும். எனவே பாக்கு, புகையிலை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

நன்றி
தினகரன்
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top