கோடை வெயில் காரணமாக உடலில் அதிக அளவில் ஏற்படும். உடலில் பித்தம் அதிகமானால் நமக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதே போல கோடை காலத்தில் கல்லீரல் தொற்றும் அதிகமாக காணப்படும். எனவே அன்றாடம் வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி பித்தத்தை எப்படி சமாளிக்கலாம் என்பதற்கான மருந்து ஒன்றை தயார் செய்யலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு, ஏலக்காய், மல்லி. கால் டீஸ்பூன் அளவு சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஏலக்காயை சேர்க்கவும். இதனுடன் 5 மிளகை சேர்க்கவும். சிறிதளவு தனியா எனப்படும் மல்லியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை லேசாக தட்டி போட வேண்டும். சிறிதளவு சுக்கு பொடியை சேர்க்க வேண்டும். சுவைக்காக சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து ஒரு டம்பளருக்கு தேவையான நீரை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதை நாம் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் இந்த தேநீரை தினமும் காலையில் பருகுவதால் உடல் உஷ்ணம் தணிகிறது. கோடை காலத்தில் நமக்கு பித்த பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் இந்த காலகட்டத்தில் கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுவதால் பித்த பாதிப்பு நமக்கு ஏற்படுகிறது. உடலில் வாத, பித்த, சிலேத்துமத்தை சமநிலைக்கு கொண்டு வருகிறது.
உடலில் நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம். இதனால் நோய் தடுப்பு மருந்தாகவும் இந்த தேநீர் பயன் தருகிறது. இதனால் கோடை காலங்களில் டீ, காபியை தவிர்த்து விட்டு இதை தொடர்ந்து பருகுவதால் நோய் இல்லாதவர்கள் கூட வருமுன் காக்கலாம். மேலும் கல்லீரல் தொற்று வராமலும் பாதுகாக்கலாம்.
வெயிலினால் ஏற்படும் பித்த பிரச்னைகளுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் கொத்துமல்லி இலைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை குறித்து பார்க்கலாம். கொத்துமல்லி இலைகளை எடுத்து வென்னீர் விட்டு நன்றாக அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை நன்றாக அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கொத்துமல்லி சாறுடன் ஒரு டீஸ்பூன் சீரகத்தை பொடி செய்து சேர்க்க வேண்டும்.
பிறகு தேவையான அளவு நீர் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு சுவைக்காக சிறிதளவு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். கோடை காலத்தில் இந்த கொத்துமல்லி சாறை பருகி வருவதன் மூலம் பித்த பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
நன்றி
தினகரன்

Post a Comment